மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி பூரம் விழா


மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 26 ஆம் தேதி ஐப்பசி பூரம் விழா நடைபெறுகிறது. தீபாவளி தினத்தன்று அம்மனுக்கு தங்கக்கவசம், வைரக்கிரீடம் சாத்தப்படுகிறது.

அக்டோபர் 26 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு மூலஸ்தான அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடைபெறுகிறது. உச்சிக்காலத்தில் ஆலவட்ட உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேரும்.

அக்டோபர் 29 ஆம் தேதி தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கக் கவசமும், வைரக்கிரீடமும் சாத்தப்படும். சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடியாகிறது.
அதேபோல அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை திருக்கோயிலில் கோலாட்ட உற்சவம் நடைபெறும். விழா தொடக்க நாள் முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி, ஸ்ரீமீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்துவார்.

நவம்பர் 4 ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மன் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார். நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் அருள்பாலிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment