பத்திரகாளி அம்மன் கோயில் பொங்கல் கொடை விழா...


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சாக உற்சவ கொடை  விழா' கொடியேற்றத்துடன் கடந்த 24 ம் தேதி காப்பு  11 நாள் திருவிழா கட்டுதல் கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும்  பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேக அலங்காரம் தீப ஆராதனை நடைபெற்றது.

 திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் பத்திரகாளி அம்மன் கோயில் முன்பாக பெண்கள் சிறுமிகள் கும்மி பாட்டு கும்மியாட்டம் நடனமாடி அம்மனைப் போற்றி துதி பாடி மகிழ்ந்தனர் அதனைத் தொடர்ந்து வானவேடிக்கு மேல தாளங்களுடன் 1008 முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்று, சாயல்குடி பேருந்து நிலையம் தூத்துக்குடி -  ராமநாதபுரம், மற்றும் கமுதி, அருப்புக்கோட்டை ஆகிய முக்கிய சாலைகளின் வழியாக  ஊர்வலமாக சென்று கங்கை நீரில் முளைப்பாரிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள்  கங்கை நீரில் கரைத்து சென்றனர்.

 



Leave a Comment