திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்.... 


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.

அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றவிழா நடைபெற்றது.

அப்போது சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

உத்தராயண புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு மார்கழி மாத இறுதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. 10ம் நாளான தை மாதம் முதல் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி விழாவுடன் நிறைவுபெறவுள்ளது.

இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் காலை மாலை என இருவேளையும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாடவீதியில் வலம் வந்து அருள்பாலிப்பார். நிறைவு நாளான தை 1-ஆம் தேதி(14.01.2022) தாமரை குளத்தில் தீர்த்தவாரியோடு இவ்விழா நிறைவுபெறும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment