ராகு - கேது பெயர்ச்சி... பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்


பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் தலைதூக்கலாம். உத்திர நக்ஷத்ரத்தில் ராகுவும் - பூரட்டாதி நக்ஷத்ரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் - புதன் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது சூரியனுடைய நக்ஷத்ரம் - குருவின் ராசியில் இருக்கிறார். 

அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் புதன் வீட்டில் இருக்கிறது. சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். 

பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும். அதே வேளையில் கேதுவிற்கு முதல் கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் - கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். 

ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். 

பொது பரிகாரம்:
ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு வினாயகர் - ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.

பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம்

பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம்
 



Leave a Comment