மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா


புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வர பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா, 800-கிலோ எள்ளு,800-கிலோ காட்டன் துணி 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி 80 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகர கும்ப தீபம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர சனீஸ்வர பகவான் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு கிரக பெயற்சியின் போது விசேஷ பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம், அதன்படி இன்று நடைபெற்ற சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு ஒன்பது வகையான பூக்கள் மற்றும் ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து 5:23 மணிக்கு மகர ராசியில் இருந்து சனி பகவான் கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பஞ்ச தீபங்கள் ஏற்றி சனி பகவானை நல்லெண்ணெயால் குளிர வைத்து தோஷங்கள் நீங்க பரிகாரம் செய்து மனம் உருகி வேண்டினர்.

மேலும் நாடு நலம் பெற நல்லது நடக்க வேண்டும் என 800 கிலோ எள்ளு 800 கிலோ காட்டன் துணி மற்றும் 8-ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி 80 அடி உயரத்தில் மகரகும்ப தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி மட்டும் இன்றி தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை வணங்கி சென்றனர்.

இதனை தொடர்ந்து முதல் முறையாக சனிபகவானுக்கு இடைவிடாமல் 44 நாட்கள் நல்லெண்ணெய் அபிஷேகம்,மகா யாகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment