புதுச்சேரி - மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா!


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் இது 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவாகவும் கொண்டாடப்படவிருக்கிறது.

விழாவையொட்டி தினசரி காலை, மாலை வேளையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.தொடர்ந்து வருகிற 21-ந் தேதியன்று சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவமும், பௌர்ணமி கடல் தீர்த்தவாரியும், வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவும், 27-ந் தேதி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

விழாவில் 28-ந் தேதி இந்திர விமானம், 29-ந் தேதி முத்து விமானம், 30-ந் தேதி முத்துபல்லக்கு வீதிஉலாவும், செப்டம்பர் 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 3-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் 8-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறவிருக்கிறது. விழாவில் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு எண்ணற்ற பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வரவிருக்கிறார்கள்.



Leave a Comment