ராள்ளாபாடி சீரடி சாய்பாபா திருக்கோவில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேகம்...


பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி சீரடி சாய்பாபா திருக்கோவில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108.பெண்கள் பால்குடம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் கும்பாபிஷேக் நாளான ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு  காப்பு கட்டி விரதம் இருந்து 108 பக்தர்கள்   குமரப்பேட்டை அஞ்சாத்தம்மன் கோவிலில் இருந்து  மேல தாளங்கள்  முழங்க தலையில் பால்குடம் சுமந்து சுமார் 1.கிலோ மீட்டர் தூர அளவில் ஊர்வலமாக கோவில் வரை  பாதயாத்திரை வந்து கோவிலில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் கரங்களால் பாலாபிஷேகம் செய்து பாபாவை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 8 மணி அளவில் கணபதி ஹோமம், தன்வந்திரி சுதர்சன ஹோமம், தீர்க்க ஆயுள் வேண்டி ஆயுஷ் ஹோமம், பாபா மூல மந்திர ஹோமம், குரு, சனிப்பெயர்ச்சி அடைந்ததை ஒட்டி நவகிரக சாந்தி பரிகார ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப,தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவா சாய் சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.



Leave a Comment