ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் வீதி உலா


சம்பந்தர் அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும் விளங்குகிறது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஓன்றாக இத்திருத்தலம் சிறப்பு பெற்றுள்ளது. இங்கு மூலவர் ரெங்கநாதசுவாமியுடன் அருளாட்சி புரியும் அம்மன், பர்வதவர்த்தினி. இன்று நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப் பல்லக்கில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு வீற்றிருக்கும் அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இத்திருத்தலத்தில் இடம்பெற்றுள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடமாக வணங்கப்படுகிறது. மேலும் இக்கோவிலில் அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடத்தப்படுகிறது. இங்குள்ள அம்மன் இறைவி ‘மலைவளர் காதலி’ என்ற பெயரிலும் போற்றப்படுகிறார். இத்திருப்பெயரை ஞானசம்பந்தர், 'ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா' என எடுத்து ஆண்டிருக்கிறார். மாசிமாத பிரம்மோற்சவமும், ஆடிமாத அம்மன் உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் அதே சமயத்தில் அம்மன் தபசும். திருக்கல்யாண உற்சவமும்  நடைபெறுகின்றன.அத்ததைகய சிறப்புமிக்க  பர்வதவர்த்தினி அம்மன் இன்று நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப் பல்லக்கில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கவிருப்பதால் பக்தர்கள் இத்திருத்தலத்தில் பெருமளவு திரண்டிருக்கிறார்கள்.



Leave a Comment