மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம் ....


மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 5-ந் தேதியும், திக் விஜயம் 6-ந் தேதியும் நடைபெற்றது. இந்த விழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் தேர்முட்டி வீதியில் திரண் டனர். சுவாமி- அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.



Leave a Comment