திருப்பதியில் காணிக்கை முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம்....


திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.
வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.
திருப்பதியில் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாக முடி ஒவ்வொரு மாதமும் ஏலம் விடப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாதம் முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment