சபரிமலையில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை பணிகள் துவங்கின...


சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.
மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும்.

2017ஆம் வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment