ஸ்ரீசைல மல்லிகார்ஜுனசுவாமி கோயிலுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதம்...


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீசைல மல்லிகார்ஜுனசுவாமி கோயிலுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதத்தை காணிக்கையாக வழங்கினார்.

ஸ்ரீசைல பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமிக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி. வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது மனைவி ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதத்தை காணிக்கையாக வழங்கினர்.  முன்னதாக சாஸ்திர சம்பிரதாயங்களோடு பூஜைகள் செய்தனர்.  

தங்க ரதத்திற்கு அர்ச்சகர்கள் சம்ப்ரோக்ஷண ​​நிகழ்ச்சிகளை நடத்தினர்.  23.6 அடி உயர தேரில் சுவாமியும், அம்பாளும் கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.



Leave a Comment