கோவில் திருவிழாவில் திரளான ஆண்கள் நடனம் ஆடி காணிக்கை செலுத்திய நிகழ்வு....


கோவில் திருவிழாவில் நடைபெற்ற வினோத வழிபாடு திரளான ஆண்கள் நடனம் ஆடியபடி காணிக்கை செலுத்தும் நிகழ்வு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் கிராமத்தில்  ஸ்ரீ ராமலிங்கர் சமேத ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நூறாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம்..

அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 12இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து திருவிழாவில்  வைபவம் அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றங்கரையில் தீர்த்த குடம் எடுத்தல் பொங்கல் வைத்து சக்தி அழைத்தல் என இந்த தைப்பொங்கல்  விழாவை தொடங்கினர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரக்குமார்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் சிறுவர்கள் உட்பட ஆண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீரக்குமாரர்களாக கத்தி போடும் போது அனைவரும் தீசுக்கோ தாயே தீசுக்கோ என்று கூறி கத்திப்போட்டு  சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இதில் இளைஞர்கள் ஆடிய கத்தி ஆட்டம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

ஒவ்வொரு வருடமும் தை மாதம் இந்த திருவிழா நடத்தப்படுவதால் தொட்டம்பாளையம் மட்டுமல்லாது சிறுமுகை திருப்பூர் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த கத்தி போடும் வைபவத்தை காண வந்திருந்தனர்..



Leave a Comment