கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா...


கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகள் விமானகோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாரதனையுடன் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இக்கோவில் மஹாகும்பாபிஷேக திருவிழா கடந்த 20ந்தேதி கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4 கால யாகசாலை பூஜைகள் முடிவடிந்த நிலையில் இன்று மஹாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த புனித நீர் திருக்குடங்கள் மேள தளம், வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் வளாகத்தினை சுற்றி எடுத்து வரப்பட்டது.

 

இதையெடுத்து அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பாரிவார மூர்த்திகள் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மஹாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது



Leave a Comment