வெள்ளி ருத்ரகோட்டி விமானத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர்


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்ச்சவத்தின் 11ஆம் நாள் இரவு நூதன வெள்ளி ருத்ரகோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்ச்சவமானது கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து காலையிலும்,மாலையிலும் ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளிப்பர்.

இந்த நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.பின்னர் இரவு சண்டை ஏற்பட்டு ஏலவாழ்குழலி கோவித்துகொண்டு  எதிரும்,புதிருமாய் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வுற்ச்சவத்தையொட்டி ஏகாம்பரநாதரும்,ஏலவார்குழலியும் வண்ண வண்ண மலர்ஙளினால் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி நூதன ருத்ரகோட்டி விமானத்தில் எழுந்தருளி இருவரும் எதிரும் ன,புதிருமாய் சென்று பூக்கடை சத்திரம் பகுதியில் சுந்தரமூர்த்தி நாயனார் சமரசம் செய்து இருவரையும் ஒன்றிணைத்து வைக்கும் நிகழ்வு நடந்தேறியது.

பின்னர் ஏகாம்பரநாதரோடு ஏலவார்குழலி இணைந்து பக்தர்குளுக்கு காட்சியளித்த பின்னர் தூப,தீப ஆராதனைகளானது நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகள் வலம் வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலியையும் வழிநெடுகிலும் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிர கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment