கடன் தொல்லை நீக்கும் தை வெள்ளி அம்மன் வழிபாடு...


அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். தை வெள்ளியன்று அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

தை மாத வெள்ளியன்று அம்மனுக்கு  செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சமர்பித்து வணங்குவது சிறப்பு. தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும்.

அதேபோல தை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ செய்து, நைவேத்தியம் செய்து ஸ்வாமி படத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடைபெறும். மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்கும்.

 



Leave a Comment