ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி திருவிழா....


ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை மணந்து கொள்ள மார்கழி மாதத்தில் விரதமிருந்து ஆண்டாள், திருப்பாவை பாடல்களை பாடி மார்கழி 27ஆம் தேதியை கூடாரவல்லி நாளில் பெருமாளை மாலை அணிவித்து மணந்தார் என்பதே கூடாரவல்லி என்கிறோம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர் வீதியில் அமைந்துள்ள மிகவும் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலான ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி 27-ம் நாளான கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக அதிகாலையில் 5 மணி அளவில் நடைபெற்றது இதில் விஸ்வரூப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் பெருமாள் மற்றும் ஆண்டாள் கோவிலில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரகாசத்துடன் காட்சி தந்து அருள்பாளித்தார்.

பின்னர் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்த பஜனை குழுவின் பெண்கள் அனைவரும் இந்த கூடாரவல்லி நாளில் திருப்பாவை பக்தி பாடல்களை ஆண்டாளை நினைத்து மனம் உருகி பாடினர் இந்த நிகழ்வின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் மற்றும் பெருமாளை பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.



Leave a Comment