வாலாஜா தன்வந்திரி பீடத்தில் அட்சய திருதியில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை


இராணிப்பேட்டைடை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 3.5.2022, செவ்வாய்கிழமை ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி, அன்னபூரணி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சோளிங்கர் சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமம், அன்னபூரணி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், சாம்ராஜ்ய லஷ்மி ஹோமம், மஹா லஷ்மி ஹோமத்துடன் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறுகிறது

அன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப அலங்காரம், கும்ப பூஜை நடைபெற்று மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்கள் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் 11 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 12.00 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

ஸ்ரீ லட்சுமி குபேரர் திருக்கோவில்

அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேர கோவில் இது ஒரு ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாகும். செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை - திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும். இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில், முன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆனந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும். இந்த ஹோமத்தில் பங்கேற்று, குபேர யந்திரம், குபேர காசு, குபேர ரக்ஷை, குபேர குங்குமம்,அட்சதை பிரசாதங்கள் நேரிலோ அல்லது கூரியர் மூலம் பெறலாம். தொடர்புக்கு 94433 30203.



Leave a Comment