திருவண்ணாமலையில் சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீப கொப்பறை...


கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பறை சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை நடைபெறுகிறது, நாளை காலை 4 மணியளவில் திருக்கோயிலின் கருவரை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது, மகா தீபம் ஏற்றப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 - 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் 5 - 3/4 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த தீப கொப்பறை பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு சென்ற பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தூக்கி சென்றனர்.



Leave a Comment