உலக பிரசித்தி பெற்ற வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மார்ச் 20-ம் தேதி ராகு - கேது பெயர்ச்சி விழா 


இராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா அருகே அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில்நோய் தீர்க்கும் கடவுளும், காக்கும் கடவுளுமான, ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரிபெருமாளுக்கு சிறப்புமிக்க ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது. வருகிற 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை4.00 மணி முதல் 6.30 மணி வரை யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்அருளானைப்படி ராகு - கேது பெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. 

ராகு-கேதுவுக்குஅன்னாபிஷேகம் உலகஆரோக்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சைவம், வைணவம், சாக்தம், சௌரம்,கௌமாரம் மற்றும் காணாபத்யம் என்று சொல்லக்கூடிய 6 மதங்களுக்குரிய தெய்வங்களை ஸ்தாபிதம்செய்து உலக மக்களின் நலன் கருதி அன்றாடும் ஹோமங்கள் மட்டுமே செய்து வரும் இப்பீடத்தில்ராகு-கேதுக்கு என தனி சன்னதி அமைத்து பிரதி மாதம் பௌர்ணமி தோறும் அன்னாபிஷேகம் செய்துவிஷேச பிரசாதங்களை அளித்து வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் இப்பீடத்தில்ஆண், பெண் திருமணத்தடை நீங்கவும், குழந்தைபாக்கியம் வேண்டியும் ராகு-கேது பீரித்தியாகங்கள் நடைபெற்று வருகிறது. 

80க்கு மேற்பட்டதிருச்சன்னதிகள் 468 சித்தர்கள் இங்குமட்டுமே தலை ராகுவாகவும், உடம்பு கேதுவாகவும் ஒரே கல்லில் ஏக சரீரமாக அமைக்கப்பட்டுள்ளதுஎன்பது தனிச்சிறப்பாகும். மேலும் இங்கு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு தனிசன்னதி அமைக்ப்பட்டுள்ளது. இவைமட்டுமில்லாமல் 80க்கும் மேற்பட்ட தெய்வங்களுக்கு திருச்சன்னதிகளும்468 சித்தர்கள் சிவலிங்கரூபாக இருந்து அருள்பாவிக்கும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்களால்அழைக்கப்படுகிறது. 

ராகு-கேது பயிற்சிவிழா – பரிகாரம் செய்ய ராசிகள் இத்தகைய சிறப்புமிக்க தன்வந்திரிபீடத்தில் வருகின்ற மார்ச் 21-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி தன்வந்திரிபீடத்தில் 20.3.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை ராகு - கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. 

இந்த ராகு - கேது இடப்பெயர்ச்சியை முன்னிட்டுப் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள். இவ்வைபவத்தில் அருகில்உள்ள நகர கிராம பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்



Leave a Comment