குலசேகரன்பட்டினம் தசரா.... நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் - அருள்வந்து ஆக்ரோசமாக ஆடும் காளி வேடமணிந்த பக்தர்கள்.

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு உலகபுகழ்பெற்றதாகும். இந்த திருவிழா கடந்த 29ம்தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விரதமிருக்கும் பக்தர்கள் மாலையணிந்து காப்பு கட்டிய பின்னர் காளி , அம்மன், ஆஞ்சநேயர் , விலங்குகள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு வகையான வேடங்கள் அணிவது இத்திருவிழாவின் சிறப்பாகும்.மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடம் அணிந்தவர்கள் தத்ரூபமாக நடந்துகொள்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

வேடமணிந்த பக்தர்கள் குழுவாக இணைந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவர். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நாளை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். இதில் 15 லட்சம் பக்தர்கள்வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 



Leave a Comment