சந்திர பிரபை வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகனத்தில் லட்சுமி நாராயணன் அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பெரிய சேஷம்,  சின்ன சேஷம்,  அன்ன,  முத்துப்பந்தல்,  கற்பக விருட்சம், சிம்மம், கருட,  மோகினி , கஜ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது லட்சுமி நாராயணன்  அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
 



Leave a Comment