நந்தியம்பெருமான் திருக்கல்யாணம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம்...


அரியலூர் மாவட்டம் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ளது வைத்தியநாதசுவாமி ஆலயம். மூவரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். உலகமெங்கும் எழுந்தருளும் சிவபெருமானுக்கு காவலனாக உள்ள நந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் புனர்பூசம் நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து பங்குனி மாதம் புனர்பூச நாளான நேற்று இரவு நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. திருவையறு ஐயாறப்பர் கோவிலிருந்து திருமண சீர்களுடன் சுயசாம்பிகை தேவியார் பல்லாக்கில் எழுந்தருளி ஆற்றை கடந்து வைத்தியநாதசுவாமி ஆலயத்தை வந்தடைந்த பின்னர் நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகை தேவியாருக்கும் பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க நந்தி திருமணம். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனே போற்றி என முழக்கம் செய்தனர்.  நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும் என்ற ஐதீகத்தால் திருணமாகாத ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



Leave a Comment