மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு கலச அபிஷேகம்.... வீடியோ காட்சி


சென்னை மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு,அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகப் பூஜை வெகுவிமரிசையாக நடந்தது.

சென்னை அடுத்த மாங்காட்டில், பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.அம்மனின் திரு நட்சத்திரமான பூரம் நட்சத்திர தினமான  ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இக்கோவிலில், 1,008 கலச அபிஷேகம் கடந்த மூன்று நாட்களாக  நடைபெற்று வருகிறது.

இதனால்  காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் , பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். மூன்றாம் நாளான இன்று நான்காம் கால  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.இதில் வேதவிற்பனர்கள் மத்திரங்கள் முழங்க மஹாபூர்ணாதி நடத்தினர்.

பின்னர்  அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றன.

இதில்  பல்வேறு பகுதி களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற்றனர். பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், அம்மனுக்கு மாலையாக சாத்தப் பட்டது.நிகழ்ச்சியில் ஆலய பரம்பரை தர்மகர்த்தா மருத்துவர் சீனிவாசன்,அறநிலைத் துறை துணை ஆணையர் கவிதா பிரியதர்சினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Leave a Comment