திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்....


திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திரு விழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை இன்று நடைபெறுகிறது. நிறைவுநாளான நாளை தேரோட்டம் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் 5 ஆம் நாள் நிகழ்ச்சியாக வேல்வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலை இன்று நடை பெற்றது. முருகன் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் மேலரத வீதி,கீழரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு அசுரனான பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை மாலை 6 மணிக்கு நடைபெறும்.


இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.

பின்பு சுவாமி அம்பாளுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வர்.

கந்தசஷ்டி விழாவின் 7.ம் நாள் நிகழ்ச்சியாக நாளை காலை 8 மணியளவில் முருகன் தெய்வானையுடன் தங்கமயில் வகனத்தில் எழுந்தருளி கிரிவலப்பாதை வழியாக சுற்றி நகர் உலாவந்து அருள்பாலிக்கிறார். சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருவர். பின்பு தங்களது காப்புக்களைகழற்றி விரதத்தை முடித்துக்கொள்வார்கள். மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனம் நடைபெறும் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள முலவர் முருகனுக்கு தங்ககவசம் சாற்றப்படும்.



Leave a Comment