இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றத்தில் தங்கத் தேரோட்டம்


ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த தங்கத்தேரை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  பக்தர்கள்  நேர்த்தி கடனாக தங்கத்தேர்  இழுப்பது வழக்கம் கோயில் நிர்வாகத்தின்  சார்பில்  தேர் இழுக்க கட்டணமாக  ரூ 2000/- வசூலிக்கப்படுகின்றது.  

கடந்த 2 ஆண்டுகளாக பரமரிப்பு பணி காரணமாக இழுக்கப்படாமல் இருந்த தங்க தேர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

தங்கத்தேரின் இயக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தங்கத் தேரை நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்து தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் மைய மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

தங்கத் தேரை திருக்கோவில் இணை இயக்குனர் பொறுப்பு அதிகாரி மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். 

தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு ஆராதனை நடைபெற்றது அதில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தங்கத்தேர் புறப்பாடு மீண்டும் தொடங்கியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



Leave a Comment