கொடியேற்றத்துடன் தொடங்கிய...ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆடிப்பூர விழா!


108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போற்றப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருஆடிப்பூர திருவிழா. நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் 16 வண்டி சப்பரத்தில், ஆண்டாள்- ரங்கமன்னார் வீதி உலா செல்கின்றனர். தொடர்ந்து 16-ந் தேதி வரை தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.5-ந் திருநாளான 9-ந் தேதி காலை மங்களா சாசனம் வைபமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் திருமடியில், ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் அருள்பாலிக்கிறார்.

8-ம் திருநாளான 12-ந் தேதி மதுரை அழகர்கோவில், ரங்க அரங்கநாத கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்படும் பரிவட்டங்கள், ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து மறுநாள் (13-ந் தேதி) காலை 7.20 மணிக்கு திருவாடிப்பூரத் தேரோட்டம் நடக்கிறது. 16-ந் தேதி ஆண்டாள்- ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது. இத்திருவிழாவில் பங்குகொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment