திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் வைபவமாக துவங்கிய சாலக்கட்ல பிரம்மோற்சவம்...


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வைபவமாக துவங்கியது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெலுங்கு பஞ்சாங்கப்படி அதிக மாசம் வருவதால் இரண்டு பிரம்மோசங்கள் நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் துவக்கத்தில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் விமர்சையாக துவங்கியது.  ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமியை கொடி மரத்தின் அருகே எழுந்தருள ச் செய்து கொடி மரத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கருடக்கொடி ஏற்றி வைத்து விமர்சையாக துவங்கியது பத்து நாட்கள் ஏழுமலையானின் வாகன சேவைகள் காலை மாலை இரண்டு வேளைகளிலும் நடைபெறும். பிரம்மோற்சவ  வாகன சேவைகளை காண ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிந்துள்ளனர்.



Leave a Comment