ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு...


ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று காலை திறக்கப்பட்டது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் என்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாக மார்கழி தமிழ்த்திருவிழாவாகிய பகல் பத்து மற்றும் இராப்பத்து என்றநிகழ்சிகள் வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாணதும் ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊருமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து முடித்து இராப்பத்து ஆரம்பிக்கும் நாளான இன்று வைகுண்டஏகாதசி என்று அழைக்கப்படும் இந்நாளில் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும் வருடம் ஒருமுறை மட்டுமே இந்த பரமபதவாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது இன்று திறக்கப்பட்ட இந்த பரமபதவாசல் வழியாக முதலில் பெரியபெருமாளும் பின்னர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் உள்ளிட்டவர்களும் வெளியில் வருவர்.

அதன் பின்னர் பக்தர்கள் கூட்டம் வெளியேறுவர் இன்று திறக்கப்படும் இந்த பரமபதவாசல்வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்க்கு சென்று வருவதாக ஜதீகம் எனவே உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ளதால் அங்குசென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தனர்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதால் பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.



Leave a Comment