ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீரங்கம் கோயிலின் பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டது. தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வரவு, செலவு கணக்குகளை சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனி வார ஆஸ்தனம் நடைபெற்றது. சம்பிரதாய முறைப்படி வரவு, செலவு கணக்குகளை படித்த பிறகு, சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.

இதையொட்டி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், ஸ்ரீரங்கம் கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் கோவில் அதிகாரிகள், வஸ்திரங்களை எடுத்து வந்தனர்.

திருமலையில் உள்ள ஜீயர் மடத்தில் பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், 4 மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ், இணை செயல் அலுவலர் பாஸ்கர் ஆகியோரிடம் பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, ஆனி வார ஆஸ்தான பூஜைகள் நடைபெற்றன.



Leave a Comment