சிவப்பு பட்டு உடுத்தி சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்....


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ இரண்டாம் நாள் மாலை உற்சவம். சிவப்பு பட்டு உடுத்தி சூரியபிரபை  வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும்,அத்தி வரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று முதல் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.

வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மாலை உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிவப்பு பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

அதன் பின்னர் மேளதாளங்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர சிவப்பு பட்டு உடுத்திய ஸ்ரீ வரதராஜ பெருமாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.



Leave a Comment