வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா


வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழச்சி ஆகியவை நடைபெறும். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோயிலில் இருந்து 30-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சீர்வரிசை எடுத்து வந்து, மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 7 மணிக்கு கிராமியக் கலைநிகழ்ச்சி நடைபெறும். காமாட்சியம்மன் கோயிலில் இருந்து 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு பால்குடம், கொடுமுடி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் 10 மணிக்கு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பால், தீர்த்த அபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 10.30-க்கு அன்னதானம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரத் தேரில் வள்ளி - தெய்வானை தேவியருடன் முருகன் திருவீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் வாணவேடிக்கையுடனும் விழா நிறைவடைகிறது.



Leave a Comment