கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா... சிறப்பு அலங்காரத்தில் அம்மன்..


கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் மாரியம்மன் பல்வேறு காட்சி தருகிறார்.

இந்நிலையில் நவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு ஆலயத்தில் பூசாரி உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதைத்தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சி அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.



Leave a Comment