40 அடி உயர விஸ்வரூப பாலமுருகன் சிலைக்கு 2000 லிட்டர் பாலில் அபிஷேகம்...


ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் 180 டன் எடையில் ஒரே கல்லால் ஆன 40 அடி உயரம் கொண்ட விஸ்வரூப பாலமுருகன் சிலைக்கு சுமார் 2000 ஆயிரம் லிட்டர் பாலில் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது அருள்மிகு விஸ்வரூப பாலமுருகன் ஆலயம்.இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்ரூப பாலமுருகன் சிலை உள்ளது. இந்த கோயிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பால் அபிஷேகம் நடைபெற்றது.  ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சவிதா பல்கலைக் குழுமத்தின் வேந்தர் வீரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் தலைமையில் பெண்கள் 108 பேர் பால்குடம் சுமந்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

இதற்கு  பின் விஸ்வரூப பாலமுருகன் சுவாமியின் 40 அடி சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் விழா குழுவினர் 1008 லிட்டரில் பால் அபிஷேகம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் பக்தர்களுக்கும் தங்கள் பங்கிற்கு பால் கொண்டு வர சுமார் 2 ஆயிரம் லிட்டரில் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 40 அடி பிரமாண்ட சிலையில் பால் அபிஷேகம் செய்தது நீர்வீழ்ச்சியில் பால் கொட்டியது போல் இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment