வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 4-ந்தேதி நடக்கிறது


மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார்.

துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு அதாவது, விசாகம் 4-ம் பாதத்தில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

குரு பெயர்ச்சி விழா தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான திட்டை வசிஷ்டேஸ் வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

இந்த கோவிலில் குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அடுத்தமாதம் 10-ந் தேதி லட்சார்ச்சனையும், 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பரிகார ஹோமமும் நடக்கிறது.



Leave a Comment