முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்


கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயில் சஷ்டி விழா கடந்த 31-ம் தேதி தொடங்கிது.
கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 10.30-மணிக்கு மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து முருகன் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்ததாரர் என்.ஹரிஹரமுத்து அவர்களின் உபயத்தில் முருகன் சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து செல்லப்பட்டது.
உற்சவ முருகன் சுவாமி காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து முருப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் நடைபெற்று வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 12.30-மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவ நிறைவு விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.



Leave a Comment