திருமலையில் வாடகை அறை பெற முன்பணம் வசூலிப்பது ரத்து....


திருப்பதி ஏழுமலையான கோயிலில் தேவஸ்தான அறைகளில் தங்கும் பக்தர்கள் இனி முன்பணம் செலுத்த தேவையில்லை.
திருப்பதி செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான 6,500 அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ரூ.50-ல் இருந்து ரூ.6,000 வரை வாடகைக்கு அறைகள் உள்ளன.
அதில் குறைந்த வாடகையில் உள்ள அறைகளுக்கு ரூ.500-ம், மற்ற அறைகளுக்கு வாடகை தொகைக்கு ஏற்றார் போலவும் முன்பணம் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேரம் விரயம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இனிமேல் வாடகை அறைகளுக்கு முன்பணம் செலுத்த தேவையில்லை என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் திருமலையில் அறைகள் பெரும் பக்தர்கள் 24 மணி நேரம் மட்டுமே தங்க முடியும். தரிசனம் கிடைக்காமலோ அல்லது பேருந்து மற்றும் ரயில் கிடைக்காமல் போனாலோ தகுந்த ஆதாரங்களை காட்டி அறையில் கூடுதலாக ஒரு நாள் தங்கலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment