ஆறடி உயர நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை


தேனியில் பிரதோஷத்தை முன்னிட்டு ஆறடி உயர நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலை மேல் ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தனி சன்னதியில் அருள்பாளிக்கும் ஆறடி உயரம் கொண்ட நந்தி பகவானுக்கும், ஐந்து தலை நாக குடை சூழ லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

முன்னதாக சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்டா அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் வண்ண மலர் மாலைகளால் மற்றும் வெள்ளி கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் சோடச உபச்சாரம் நடத்தி மகா தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது,

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தில் சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்



Leave a Comment