பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா.... ராஜ வீதிகள் வலம் வந்த 63 நாயன்மார்கள்...


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின்  ஆறாம் நாளில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நான்கு ராஜ வீதிகள் வலம் வர ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின் ஆறாம் நாள் காலை, பிரசித்தி பெற்ற உற்சங்களில் ஒன்றான 63 நாயன்மார்கள் உற்சவத்தையொட்டி  ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமானது நடைபெற்று அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலி அம்பாளும் எழுந்தருளி, 63நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து படைச்சூழ  வர மேளத்தாளங்கள் இசைக்க,சிவ வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர்.

வழிநெடுகிலும்  உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து  ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டு பயபக்தியுடன் 63நாயன்மார்களுடன் படைச் சூழ வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வேண்டி விரும்பி  சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

மேலும் இந்த 63நாயன்மார்கள் உற்ச்சவத்தையொட்டி கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரமே  விழாக்கோலம் பூண்டுள்ளது.



Leave a Comment