ஸ்ரீ பால வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷ காட்சி....


ராணிப்பேட்டை அருகே சோழர் காலத்து மன்னரால் கட்டப்பட்ட பாலகுஜாம்பாள் ஸமேத ஸ்ரீ பால வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்  

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சோழர் காலத்து மன்னரால் கட்டப்பட்ட அருள்மிகு பாலகுஜாம்பாள் ஸமேத ஸ்ரீ பால வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் தைமாத மஹா பிரதோஷம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

இந்த பிரதோஷத்தில் விழாவில் நந்தி பகவான் பிரதோச உற்சவநாதருக்கு மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் தேன், பன்னீர், பால் , மற்றும் தங்க ஆபரணங்களை நந்தி பகவானுக்கு அணிவித்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிறகு பூ மாலைகளை அணிவித்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பூ மாலைகளை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை பக்தர்கள் கோவில் முழுவதும் பெண்கள் அனைவரும் ஈஸ்வரனை மனதில் நினைத்தவாறு பக்தி பரவசம் அடைந்து சிவன் பாடல்களை பாடியவாறு வலம் வந்தனர் பிறகு கருவறையில் இருந்த ஸ்ரீ பால வில்வநாத ஈஸ்வரனுக்கு மஹா தீபாரதனை காட்டிய பிறகு கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



Leave a Comment