திருச்சி ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா...


திருச்சி பெரியகடை வீதி ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில்  கும்பாபிஷேக விழா  நடைபெற்றது

திருச்சி பெரியகடை  வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை, ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்ய கடந்த வருடம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில்  புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில்   திருப்பணிகள் முடிவுற்று இன்று மாஹா  கும்பாபிஷேகம்   நடைபெற்றது. முன்னதாக கடந்த 19   ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 24 ஆம் தேதி காவேரியில் இருந்து  புனித நீர் எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து இன்று காலை 6 ஆம் கால யாகசாலை நடைபெற்று 9.15 மணிக்கு விமான  கும்பாபிஷேகமும்  ஆராதனையும் நடைபெற்றது. 9.45 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம்   நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி மாநகர் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment