ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தரும் கங்கையம்மன்


ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வாலாஜாபேட்டையில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தரும் கங்கையம்மன்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் 49 -ஆம் ஆண்டு விழா மற்றும் எட்டாம் ஆண்டு ஆடி மாத வெள்ளி திருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது

இதில் முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று காய்கறிகள் அலங்காரம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளையல் அலங்காரம் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீ கங்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஆவணி மாத  ஐந்தாவது வெள்ளிக்கிழமையோட்டிஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் உள்ள கருவறையில் இருக்கும் அம்மனுக்கு ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தின் நோட்டுக்களை கொண்டு கோவில் மற்றும் அம்மன் சிலைகளை அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து பல லட்சம் ரூபாய்கள் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த ஸ்ரீ கங்கை அம்மனை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பக்தியுடன் வணங்கி அம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.

வாலாஜாபேட்டை  அருகே ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கங்கையம்மனை  பலரும் ஆச்சரியத்தில் பார்த்து அம்மனை வழிபட்டு சென்றனர்.



Leave a Comment