திருமலையில் தேரில் மலையப்பர் பவனி ...


திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையான 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்நிலையில், 8ம் நாளான இன்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் மலையப்பர் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரின் மீது உப்பு, மிளகு போன்றவைகளை தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பவனி வந்து அருள் பாலித்தார்.



Leave a Comment