மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15 சபரிமலை நடை திறப்பு....


சபரிமலை, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சபரிமலை நடை திறப்பது தமிழக காலண்டர் படி ஒரு நாள் முன்னதாக திறக்கிறது. இது தமிழக- கேரள பஞ்சாங்க கணிப்பில் ஏற்பட்ட சிறு வித்தியாசத்தால் ஏற்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை நடை எல்லா தமிழ் மாதத்தின் கடைசி நாளில் மாலை ஐந்து மணிக்கு திறந்து அடுத்த தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. தமிழக காலண்டர் படி ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி அதாவது அக்டோபர் 18 ஆகும், அன்று தீபாவளி. ஆனால் கேரள காலண்டர் படி ஐப்பசி ஒன்றாம் தேதி 17-ம் தேதி ஆகும். இதனால் சபரிமலை நடை அக்டோபர், 16-ம் தேதி மாலையில் திறந்து 17 முதல் 21 வரை பூஜைகள் நடைபெறும்.அதுபோல கார்த்திகை ஒன்றாம் தமிழக காலண்டர்களில் நவம்பர் 17-ல் வருகிறது. ஆனால் கேரளாவில் நவம்பர் 16-ம் தேதி கார்த்திகை ஒன்றாம் தேதியாகும். இதனால் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவம்பர் 15-ம் தேதி மாலை திறக்கும்.



Leave a Comment