முருகனின் அருள் கூட காயத்ரி மந்திரம்.... 


திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள "நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஒட்டி முருகனுக்கு "சரஹணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம்,உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சடாட்சர வழிபாட்டு மந்திரத்தில் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்காக வேறு வேறு மர சட்டங்களில் சடாட்சரம் என்னும் அறுங்கோண யந்திரத்தை அமைத்து வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெறலாம் என கூறப்படுகிறது.

வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆல மரத்திலும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் சடாட்சரம் என்னும் இந்த அறுங்கோண யந்திரத்தை அமைத்து வழிபடுவது பலனளிக்கக் கூடியதாகும்.

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்...

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

இம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது.
 



Leave a Comment