மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலம்....


பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

தஞ்சை அடுத்த வீரசிங்கம் பேட்டையில் அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சேற்றுத் துறையில், இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன், கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை எடுத்து ஊர்வலமாக  வந்தனர்.

வழிநெடுக ஒவ்வொரு வீட்டிலும் முளைப்பாரி கலசம் எடுத்து வந்தவர்களுக்கு பாதபூஜை செய்து. தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து பூக்கூடை ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்களை கொண்டு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டன.



Leave a Comment