சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 468 சித்தர்கள் யாகம்


16.04.2022 சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 26-ஆம் ஆண்டு குரு பூஜையுடன் மஹேஸ்வர பூஜையும் 468 சித்தர்கள் யாகமும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன் இன்று 16.4.2022, சனிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 468 சித்தர்கள் யாகம், ஸ்ரீ சத்யநாராயண ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், மஹா தன்வந்திரி ஹோமம், சனி சாந்தி ஹோமம் மற்றும் 26 ஆம் ஆண்டு மகேஸ்வர பூஜை குரு பூஜையும் ஸ்வாமிகள் ஆசிளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறவும் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி, குழந்தை பாக்யம், போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கவும் நடைபெற்றது. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் 468 சித்தர்களுக்கு கலசங்கள் கொண்டு பக்தர்களின் திருக்கரங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மகா அபிஷேகமும் சப்தரிஷி பூஜையும் மற்றும் இராகு-கேது அன்னாபிஷேகம் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் எண்ணற்ற சாதுக்கள், சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Leave a Comment