146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் சிலை அற்புத வீடியோ...


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்து மலை அடிவாரத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது . 2016 ம் ஆண்டு துவங்கப்படு ஆறு ஆண்டுகளாக  நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வண்ணமிகு அழகு முருகன் சிலைக்கு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.  இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான நாமக்கல் தர்மபுரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன் என்பவர் இந்த கோவிலை கட்ட ஆரம்பித்து, அவருடைய மகன் ஸ்ரீதர் அவர்களால் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை தான் இதுவரை உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என பிரசித்தி பெற்று வந்தது இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கோயிலை வடிவமைத்த ஸ்தபதி  திருவாரூர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர்,  சேலம் , புத்திரக்கவுண்டம்பளையத்தில் உள்ள இந்த  முதுமலை முருகன் சிலையை வடிவமைத்து உள்ளனர்.  146 அடி கொண்ட  இந்த முருகன் சிலை   தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை  என்ற சிறப்பை  பெற்றுள்ளது. 

ஆத்தூர் தொழிலதிபரும், முருக பக்தருமான பெரியவர் முத்து நடராஜன் , மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று வந்த நிலையில்,  அதேபோல மிக உயரமான முருகன் சிலையை சேலத்தில் நிறுவ வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, புத்திரகவுண்டம் பாளையத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில்  இந்த கோவிலை  மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க நினைத்து,  கட்ட ஆரம்பித்தார்.

அதன்படி முத்துநடராஜனை தொடர்ந்து அவரது மகன் ஸ்ரீதர் தற்போது கோவிலை கட்டி முடித்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து மலர்களை தூவப்பட்டது. 



Leave a Comment