திருமலையில் 2 ஆண்டுகளுக்கு பின் ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம்.... 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சணை அனுமதி சீட்டு நேரில் வழங்குவது கடந்த 2020 மார்ச் மாதம் 20 ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கி உள்ளது.

இந்த சேவைக்கான டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள், திருமலையில் உள்ள அதற்கான கவுண்ட்டர்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பதிவு செய்த பக்தர்கள் முன்னிலையில் எல்இடி திரையில் முதல் குலுக்கலில் (டிப்) தானியங்கி தரவரிசை அடிப்படையில் மாலை 6 மணிக்கு அவர்களுக்கான நம்பர் ஒதுக்கப்படும். பக்தர்கள் எந்தெந்த சேவை டிக்கெட்டுகள் கேட்டுள்ளார்களோ அதற்கு தகுந்தாற்போல் நம்பர் வழங்கப்படும்.

குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள், அவற்றை பெறுவதற்கு இரவு 11 மணிக்குள் அவர்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் தகவல் வரும்.

ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவை போன்று, ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இற்காக திருமலையில் உள்ள இரு கவுண்ட்டர்களில் தினமும் 750 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
 



Leave a Comment