தன்வந்திரி பீடத்தில் அஸ்வமேத யாக பலன் தரும் நெல்லிப் பொடி திருமஞ்சனம்....


அஸ்வமேத யாக பலன் தரும் மாசி வளர்பிறை ஏகாதசி முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப் பொடி திருமஞ்சனம் 14.3.2022 திஙகட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி வருகிற 14.3.2022, திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு 9 அடி மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி மற்றும் நவக்கலச திருமஞ்சனம் பல்வேறு மூலிகைக் கொண்டு மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது. 

தன்வந்திரி பகவானை வழிப்பட்டால் கிடைக்கும் பலன்கள்

நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு உலக ஆரோக்ய பீடமாக திகழும் தன்வந்திரி பீடத்தில் நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை பெருவதற்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி பெருமாளுக்கு ஆலயம் அமைத்து ஹோம பூஜைகள் நடைப்பெற்று வருகிறது தன்வந்திரி பகவானை ஏகாதசி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு என்கிறார் ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகள்.

புராணங்களில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இறவா நிலை தரும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைந்தபோது இறுதியாக மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவரான தன்வந்திரி பகவான் மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் இறவா நிலையை தரும் அமிர்த கலசம் மற்றும் நோய்களை போக்கும் பல மருத்துவ மூலிகைகளுடன் தோன்றினார்.

நோய்களை போக்கி, உடல்நலத்தை காக்கும் மூலிகைகளை உலகத்தாரின் பயன்பாட்டிற்கு வெளிக்கொணர்ந்ததால் தன்வந்திரி பகவானை மருத்துவக்கடவுளாக வணங்கப்படுகிறார். இவரை மருத்துவதுறையின் தந்தை என்றும் காக்கும் கடவுள் என்றும் அழைத்து மகிழ்கின்றனர்.

தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக ஏகாதசி தினத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த விரத நாளன்று வறியவர்களுக்கு வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் கொடுமையான நோய்கள் நம்மை பீடிக்காமல் மரணங்கள், துர்மரணங்களில் இருந்து மீண்டு, தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என்பது நம்பிக்கை. மேலும் மாசி மாத ஏகாதசி திதியில் விரதமிருந்து தன்வந்திரி வழிபாடு செய்வதின் மூலம் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும், மூதாதையர்களுக்கு மோட்சம் கிடைக்கும், மன உளைச்சல் நீங்கும் அஸ்வமேத யாகம் செய்த பலனைத்தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. 

இத்தகைய சிறப்புமிக்க ஏகாதசி நாளில் தன்வந்திரி பீடத்தில் பால், தயிர், நெல்லிப்பொடி, அருகம்புல் சாறு, கரும்பு சாறு, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் ஏலக்காய் தீர்த்தம், பஞ்சாமிருதம் போன்ற விஷேச திரவியங்களைக் கொண்டு நவக்கலச திருமஞ்சனம் மற்றும் விலை உயர்ந்த மூலிகைகள் கொண்டு நடைபெறும் ஹோமங்களிலும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.    



Leave a Comment